கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்

கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயற்குழு கூட்டம்
மாநிலத் தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். செயற்குழு கூட்டத்தின் துவக்க உரையாக மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் இறையச்சம் குறித்து பேசினார் அதனைத் தொடர்ந்து மேலாண்மை குழு தலைவர் சம்சுல்ஹா ரஹ்மானி, மாநில தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலச் செயலாளர்கள் அன்சாரி, செங்கோட்டை பைசல், தாவூத் கைசர், யூசுப் அலி, சபீர் அலி, மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாவட்ட நிர்வாகிகளான மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர் . இதற்கான விரிவான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட தலைவர் அப்துல்சலாம், செயலாளர் ஜலாலுதீன் ,பொருளாளர், அன்வர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர் புளியங்குடி பிலால், செங்கை காஜா, கடையநல்லூர் அப்துல் பாசித் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
Tags :