புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது..

by Admin / 29-11-2025 03:41:59pm
புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது..

வங்காள விரிகுடாவில் உருவாகி உள்ள புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் தமிழக அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. புயலை எதிர்கொள்ளும் முகமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், சென்னை ,திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் , ராமநாதபுரம் ,புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்  டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர் உடன் காணொளி வாயிலாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் படகுகள் சேதம் அடைந்துள்ளன பாம்பன் பாலத்திலும் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

 

Tags :

Share via