ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள்

by Editor / 27-04-2022 08:37:54pm
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து :மீட்பு பணியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  கல்லீரல் சிகிச்சை பிரிவு அருகில் மின்கசிவு காரணமாக தீடிர் தீ விபத்து ஏற்பட்டது. தீயனைப்பு துறையினர்2 மணி  நேரத்திற்கு மேலாக  போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த தீ விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்கும் பணியில்  பத்திரிக்கையாளர்கள் மற்றும்  ஊடகத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்,தீ விபத்தினால்  ஏற்பட்ட கரும்புகை பரவி அருகில் இருந்த 
நரம்பியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனால் அந்த நோயாளிகளை  தீயணைப்புத் துறையினரும் நோயாளிகளின் உறவினர்களும் பத்திரமாக  மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 
தீ விபத்து சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படங்கள்  மூலம் பதிவு செய்து கொண்டிருந்த திருவாளர்கள்: ஜோதி ராமலிங்கம்( தி இந்து புகைப்படக் கலைஞர்) சிவா( தினகரன்  புகைப்படக் கலைஞர்) பிரதாப் ( டைம்ஸ் ஆஃப் இந்தியா புகைப்பட கலைஞர் )  அஸ்வின் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர்) விஜி ( தினமலர் சி.என்.எஸ் புகைப்பட கலைஞர் ) சண்முக சுந்தரம் ( தினத்தந்தி புகைப்பட கலைஞர்) சத்தியசீலன் ( தினமலர்  புகைப்படக் கலைஞர் ) குமரேசன் ( நக்கீரன் புகைப்படக் கலைஞர்) முருகேசன்( புதிய தலைமுறை செய்தியாளர்) பிரமோத் ( இந்தியா டுடே செய்தியாளர் ) சுகுமார் ( இந்தியா டுடே ஒளிப்பதிவாளர் ) ஐயப்பன் ( புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்) உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் களத்தில் இறங்கி நோயாளிகளை மீட்கும் பணியில் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர்.

ஒரு பக்கம் செய்தி சேகரிக்கும் கடமையில் ஈடுபட்டுக் கொண்டே மனித நேயத்துடன் செயல்பட்ட பத்திரிகை, ஊடக உறவுகளின்  சேவை பொதுமக்கள் மத்தியில்  பத்திரிகை உலகிற்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளது.நோயாளிகளுக்கு மனித நேயத்துடன் உதவிய பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம்   சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

 

Tags :

Share via

More stories

Logo