பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு- ஜோதிமணி எம்பி கேள்வி

by Editor / 03-07-2021 08:49:11am
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு- ஜோதிமணி எம்பி கேள்வி

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் 100 ரூபாய்க்கு மேல் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தொடப்போகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை கவலையடையச் செய்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை உயர்த்திய நிலையில் தற்போது வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு சிலிண்டர் 850 ரூபாய் ஆக விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சியினர் போராடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு கொள்ளையடித்துள்ளதாக ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரொனா தொற்றால் மக்கள் உயிருக்கும்,அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கும் போராடிக் கொண்டிருக்கும் போது ஒரு அரசு இப்படியா நடந்துகொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via