காவிரி விவகாரத்தில் சமரசமில்லை - டி.கே.சிவகுமார்

by Staff / 23-08-2023 02:04:31pm
காவிரி விவகாரத்தில் சமரசமில்லை - டி.கே.சிவகுமார்

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காவிரி விவகாரத்தில் சமரசமில்லை எனத் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் பல்வேறு கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடகா அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது என்றும். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் தொடரும் என்றும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்”என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories