அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக தலைமை அறிவிப்பு
அ.திமு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்-இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வெளியிட்ட
அறிவிப்பு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக்கூட்டம் 23.6.2022- வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,நடைபெறஉள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது சம்பந்தமாக தலைமைக் கழக நிர்வாகிகள்,மாவட்டக்கழகச்செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம்14.6.2022 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை,ராயப்பேட்டை,அவ்வை சண்முகம் சாலையில் உள்ளதலைமைக்கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகளும்,மாவட்டக்கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என .என்று அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

