சாலையில் தீப்பிடித்த கார்

by Staff / 04-10-2022 05:19:33pm
சாலையில் தீப்பிடித்த கார்


சென்னை, நொளம்பூரைச் சேர்ந்தவர் சதீஷ், 39; மென்பொறியாளர். நேற்று மாலை, மகேந்திரா காரில் குடும்பத்துடன், பெருங்களத்துார் - மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு சென்றார். திருநீர்மலை அருகே சென்ற போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. காரை நிறுத்திவிட்டு, அனைவரும் கீழே இறங்கிய சற்று நேரத்தில், கார் தீப்பிடித்து எரிந்தது. தகவலின்படி, தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo