உலகிலே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவி உள்ள சீன விஞ்ஞானிகள்

by Staff / 06-05-2022 03:43:27pm
உலகிலே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவி உள்ள சீன விஞ்ஞானிகள்

சீன விஞ்ஞானிகள் உலகின் மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தின் நிறுவியுள்ளனர் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரத்து 830 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவி உள்ளவர்கள் அந்த தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும் தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் அமைந்துள்ள ஏழாவது வானிலை ஆய்வு மையம் ஆகும் அதில் சீனா நேபாள எல்லையில் உள்ள மலைப்பகுதியில் ஏற்படும் பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி ஆகியவற்றின் அடர்த்தியை துல்லியமாக அறிந்துகொள்ள உதவும் வகையில் வசதியும் உள்ளது.

 

Tags :

Share via