அமேசானில் வெளியான விவேக்கின் கடைசி காமெடி நிகழ்ச்சி

by Editor / 02-09-2021 08:20:30pm
அமேசானில் வெளியான விவேக்கின் கடைசி காமெடி நிகழ்ச்சி

புத்தம் புது நகைச்சுவை நிகழ்ச்சியாக தமிழில் ஒளிப்பரப்பாக உள்ள நிகழ்ச்சிதான் 'எல் ஓ எல்'.. அதாவது எங்க சிரி பாப்போம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை மறைந்த விவேக் மற்றும் நடிகர் சிவா இணைந்து தொகுத்து வழங்கியுள்ளனர். நடிகர் விவேக் இறப்பதற்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில்தான் கடைசியாக பங்கேற்றாராம். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு ரூமில் பத்து நகைச்சுவை போட்டியாளர்களை தங்க வைப்பார்கள். அப்போது ஒருவருக்கொருவர் மற்றவர்களை சிரிக்க வைக்கவேண்டும். இந்த போட்டியாளர்களில் யார் கடைசியாக சிரிக்கிறாரோ, அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர்.இந்நிகழ்ச்சியில் மாயா எஸ். கிருஷ்ணன், அபிஷேக் குமார், ப்ரேம்ஜி அமரன், ஆர்த்தி கணேஷ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், சதீஷ், புகழ், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், பேகிமற்றும் ஸ்யாமா ஹரினி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். சற்று முன் அமேசான் பிரைமில் முதல் எபிசோடு ஒளிப்பரப்பாகவிருக்கிறது. இந்த போட்டியாளர்களில் யார் கடைசியாக சிரிக்கிறாரோ, அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இந்த போட்டியின் வின்னருக்கு 25 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.போட்டியாளர்கள் அடுத்தவர்களை சிரிக்க வைக்கலாமே தவிர அவர்கள் சிரிக்கக் கூடாது. 

 

Tags :

Share via