ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி

by Staff / 26-09-2022 05:31:47pm
ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் பலி

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள ஹோஸ்ட் என்ற பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. இதில் 2 தளபதிகள் உள்பட 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

 

Tags :

Share via