இன்று முதல் வந்துள்ள மாற்றங்கள் 

by Editor / 30-06-2021 04:28:05pm
இன்று முதல் வந்துள்ள மாற்றங்கள் 

ஜூலை.1 முதல் ஓட்டுநர் உரிமம், வங்கி கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன.

ஓட்டுநர் உரிமத்தைப் பெற,இனி போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை. ஏனெனில், ஜூலை 1 முதல் புதிய விதிகளின்படி, இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளிலே அதற்கான பயிற்சியை முடித்து விட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம்.

எஸ்பிஐ சேவைகளுக்கு கட்டணம் அமல்:
எஸ்பிஐ (SBI), அதன் முக்கிய சேவையான பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட்டில் (BSBD) தான் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்ற சேவைகளுக்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளன. குறிப்பாக ஜூலை 1 ஆம் தேதி முதல், எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மூலமாக ஒரு மாதத்தில் நான்கு முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியும். அதற்கு மேல் உபயோகித்தால் கூடுதலாக ரூ .15 + ஜிஎஸ்டி கட்டணங்கள் செலுத்த வேண்டும்.*

கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியில் மாற்றம்:
கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்ட நிலையில், சிண்டிகேட் வங்கியின் ஐ எஃப் எஃப் சி கோடுகள் ஜூலை முதல் இயங்காது என கனரா வங்கி அறிவித்துள்ளது.
*சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக்கு சென்று IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம். பழைய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயன்படுத்தி, ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு புதிய வசதி:
வருமான வரித்துறையினரின் புதிய வசதி இது குறித்து எளிதில் இணையத்தில் கண்டறியும் விதமாக புதிய வசதி ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இது டிடிஎஸ் பிடித்தம் செய்வோருக்கும், டிசிஎஸ் வசூலிப்பவருக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

சிலிண்டர் விலையில் மாற்றம்
சமையலுக்காக பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ஜூலை 1 முதல் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்பிஜி சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சிலிண்டர்களின் விலை ஜூலை 1 முதல் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via