வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் கூண்டோடு மாற்றம்.

by Editor / 30-05-2023 08:50:25am
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் கூண்டோடு மாற்றம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கலாச்சாராயம் காய்ச்சு மலை அடிவாரங்களில் உள்ள கிராமங்களுக்கு லாரி ட்யூப் களின் மூலம் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் மலைப்பகுதிகளில் வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் ஊரல்களை பறிமுதல் செய்து அழித்து வந்தனர்.பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தற்போது மதுவிலக்கு அமலாக்கு காவல் துறையினர் 18 காவல் ஆளுநர்கள் (PC )மற்றும் இரண்டு காவல் உதவியாளர்கள் (SI )என 20 காவலர்களை கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்டத்தில் உள்ள காவல்  நிலையங்களில் பணியமத்தியுள்ளார்.மேலும் தற்போது புதிதாக 18 காவல் ஆளுநர்கள் (PC) மற்றும் நான்கு துணை ஆய்வாளர்கள் (SI) என 22 காவலர்களை  மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களாக பணியமத்தியுள்ளார். 

 

Tags :

Share via