நாடாளுமன்றத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஏன் நுழைய முடியாது அன்புமணி ராமதாஸ் கேள்வி

by Staff / 13-12-2023 05:27:32pm
நாடாளுமன்றத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஏன் நுழைய முடியாது  அன்புமணி ராமதாஸ் கேள்வி

புகை குண்டுகளுடன் எளிதாக செல்ல முடியும் என்றால் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஏன் நுழைய முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இதுகுறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி; "அவைக்குள் மிகவும் எளிதாக நுழைந்து தாக்குதலை நடத்த முடியும் என்பது கவலை அளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட்டு. பாதுகாப்பில் கோட்டைவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
 

 

Tags :

Share via