தஞ்சாவூரில்  நகைக்கடை மீது தாக்குதல்;  இருவர் கைது

by Editor / 01-05-2021 05:36:03pm
தஞ்சாவூரில்  நகைக்கடை மீது தாக்குதல்;  இருவர் கைதுதஞ்சாவூர் காந்திஜி சாலையில்  ஒரு நகைக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நகைக்கடையில் பூதலூர் அடுத்த செல்லப்பன்பேட்டையை சேர்ந்த நேதாஜி என்பவர் தனது உறவினர்களுடன் வந்து நகை வாங்கி வீட்டுக்கு சென்றார்.சில தினங்கள் கழித்து நகையை சோதித்தபோது, நகையின் தரம் குறைவாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, நேதாஜி உள்ளிட்ட 3 பேர் நகை கடைக்குள் புகுந்து அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையில் இருந்த பணியாளர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.இந்த தாக்குதல் காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து, நகைக்கடை உரிமையாளர் கமல் சந்த் ஜெயின் தஞ்சாவூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நேதாஜி உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via