இலங்கையில் வாழ வழியின்றி 3 குழந்தைகளோடு வந்த 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

by Editor / 22-03-2022 05:58:57pm
இலங்கையில் வாழ வழியின்றி 3 குழந்தைகளோடு வந்த 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.

இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுக்கு  அகதிகளாக மக்கள் வரும் வாய்ப்பு இருப்பதால் இலங்கையின் அருகேயுள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் தனுஷ்கோடி அருகே 3ம் மணல்திட்டு பகுதியில் 3 குழந்தைகளுடன் இலங்கையைச் சேர்ந்த 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். அத்தியாசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை இலங்கையில் உள்ளதால் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வரும் நாட்களில் பஞ்சம் பிழைக்க இன்னும் பலர் தமிழ்நாட்டுக்கு வரலாம் என்பதால் தனுஷ்கோடி பகுதியில் 13 மணல் திட்டு பகுதி உள்ளிட்ட தமிழகத்தின் கடலோட மாவட்டங்களில், கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. வந்த 6 பேரை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனரா..?இல்லை கைக்குழந்தைகளோடு அவர்களை சிறையில் அடைக்க உள்ளனரா என்பது  குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
 

இலங்கையில் வாழ வழியின்றி 3 குழந்தைகளோடு வந்த 6 பேரை கடலோர காவல்படையினர் மீட்டனர்.
 

Tags : Coast Guard rescues 6 Sri Lankans with 3 children

Share via