மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

by Admin / 01-03-2019
மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல்கிணறில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய வைக்கோ கைது.

மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் பிரதமருக்கு ஆரல்வாய்மொழியில் கருப்பு கொடி காட்டப்போவதாக வைகோ அறிவித்திருந்தார். இதையடுத்து ஆரல்வாய்மொழியில் நேற்று இரவு முதலே பாஜ மற்றும் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் ஆரல்வாய்மொழியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி அங்கு மதிமுகவினர் குவிந்தனர்.இதனிடையே அங்குவந்த வைகோ கருப்பு பலூன்களை பறக்கட்டும் கருப்பு கொடி காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் விரட்டியடித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து போலீசார் வைகோவை கைது செய்தனர்