எண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

by Admin / 13-11-2018
எண்ணெய் இருப்பு வைக்க அபுதாபி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: கடந்த 1990ல் வளைகுடா போரின்போது, இந்தியாவில் இருப்பு வைத்திருந்த பெட்ரோலிய பொருட்கள் 3 நாட்களுக்குதான் வந்தன.

பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மீண்டும் இதுபோன்ற அவசர நிலையை கையாள ஆந்திர மாநிலம் விசாகபட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் பெட்ரோலிய சேமிப்பு நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சேமித்து வைக்க முடியும். இதை வைத்து சுமார் 10 நாட்களுக்கு சமாளிக்கலாம். இதில் 1.5 மில்லியன் டன் எண்ணெய் சேமித்து வைக்க அபுதாபி நேஷனல் ஆயில் கார்ப்பொரேஷனுடன் மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்தது. மேலும் 1.5 மில்லியன் டன் இருப்பு வைக்க நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

Share via