அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

by Staff / 31-01-2023 04:29:47pm
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

தூத்துக்குடி முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் என்பவரை கொலை முயற்சி செய்த வழக்கில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட ஐந்து பேரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி குருமூர்த்தி குற்றச்சாட்டு உரிய முறையில் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சுரேஷ் திமுக நகர செயலாளராக கடந்த 2011ம் ஆன்டு இருந்துள்ளார், திமுக நகர செயலாளர் சுரேஷுக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாகவும், திமுக கோஷ்டி பூசல் காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.இதில் கடந்த 2011 ஆம் ஆண்டு பல்வேறு பகுதிகளில் திமுக நகர செயலாளாரக இருந்த சுரேஷின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கு அவரது அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு மேலும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட மூன்று வழக்குகள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராதாகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் கோபி உதயகுமார் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் விசாரணைகள் முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.இதை அடுத்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி வழக்கு விசாரணையில் அரசு தரப்பு குற்றச்சாட்டை உரிய முறையில் நிரூபிக்காததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
 

 

Tags :

Share via