முக்கிய நிகழ்வுகள்

by Editor / 09-03-2022 11:03:53am
முக்கிய நிகழ்வுகள்

 2006-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி சனியின் துணைக்கோளான என்செலடஸில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

 1959-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி பார்பி பொம்மை முதன்முதலாக விற்பனைக்கு வந்தது.


பிறந்த நாள் :-

*யூரி ககாரின்
 விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.

1955-ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

இவர் 1960-ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளி திட்டத்தில் இணைந்து கொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார்.கடும் பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.

1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி Vostok 3KA-3(Vostok1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். வாஸ்டாக் விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் சென்றார்.

 விண்கலத்தில் முதற்தடவையாக பூமியை வலம் வந்தவர் என்ற பெருமைக்குரிய இவர் தன்னுடைய 34-வது வயதில்(1968) மறைந்தார்.

 

Tags :

Share via