இம்ரான் கானை கைது செய்ய களமிறங்கிய ராணுவம்

by Staff / 15-03-2023 04:00:39pm
இம்ரான் கானை கைது செய்ய களமிறங்கிய ராணுவம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை போலீசார் ஊழல் வழக்கில் கைது செய்ய முயற்சி செய்த நிலையில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அதில், போலீஸ் வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கடைகள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். இம்ரான்கான் வீட்டின முன்பு நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவல்துறையினரால் இம்ரான் கானை நெருங்க முடியாததால் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் எனப்படும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை கைது நடவடிக்கைக்காக அரசு களமிறக்கியுள்ளது.

 

Tags :

Share via