அன்பில் மகேஷ் உதவியாளரிடம் போலீஸ் விசாரணை
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உதவியாளர் அருண் பிரகாஷிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அன்பில் மகேஷிடம் காவல்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரது உதவியாளரிடம் விசாரிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் உள்ளார். அண்மையில் திருச்சி, சென்னையில் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :













