ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் எதற்கு..?- முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 10-04-2023 01:58:22pm
ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் எதற்கு..?- முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் எதற்கு என்றார் அண்ணா, அதற்கு நானும் உடன்படுகிறேன் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக 2வது முறையாக தீர்மானம் கொண்டு வர உள்ளேன். தமிழக அரசுக்கும், மக்களுக்கும் தோழனாக இருக்க, தமிழக கவர்னர் தயாராக இல்லை. தமிழக அரசுக்கு எதிராக பேசுவதையே வாடிக்கையாக கொண்டவர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo