வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது. அதன்படி, அண்மையில் அதன் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காணொளி வாயிலாக தொடங்கியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தோல்வியடைந்தால் திமுக மாவட்டச் செயலாளர் நீக்கப்படுவர் தொகுதி பார்வையாளர்களுக்கு சரியாக ஒத்துழைக்காத மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவர்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags :