பல நாடுகள் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தும் முறையை கைவிட்டு வருகின்றன.
டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக இந்த மாற்றம் உலகளவில் வேகமாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது.பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் பல நாடுகள் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்தும் முறையை கைவிட்டு வருகின்றன. விமான நிலையங்களில் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் சோதனைகள் தானாகவே முடிகின்றன. பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடு குறித்த தகவல்கள் நேரடியாகக் குடிவரவுத் துறையின் கணினி அமைப்பில் பதிவாகிவிடும். பாஸ்போர்ட்டில் முத்திரை இடும் முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி வருகின்றன. இந்த முறையால் குடிவரவுச் சோதனை வரிசைகளில் காத்திருக்கும் நேரம் பெருமளவு குறைகிறது.இருப்பினும், சில குறிப்பிட்ட விசா வகைகள் அல்லது சில நாடுகளுக்கு இன்னும் தற்காலிகமாக முத்திரை பயன்படுத்தும் நடைமுறை உள்ளது.
Tags :


















