போரும் குல நாசமும்
அர்ஜீனன்-"கிருஷ்ணா எங்களின் தந்தையாகிய பாண்டுவும் கெளரவர்களின் தந்தையாகிய திருதராஷ்ட்ரனும் உடன்பிறந்த சகோதரர்கள் .ஆகவே ,பாண்டவர்களாகிய நாங்களும் கெளரவர்களாகிய துரியோதன கூட்டமும் ஒரே குலத்தைச்.நான் போர் புரிவதால் எங்கள் குலம் அழிந்து போகும்
.எவன் தன் குலத்தை அழிக்கிறானோ அவன் கொடியபாவி.ஆகவே,நான் அவர்களை கொல்ல விரும்பவில்லை.குடும்பத்தினரைக்கொல்வதால் எனக்கு இந்த உலகத்திலோஅல்லது மேல் லோகத்திலோ எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை .மேலும் எனது பாசத்திற்குரிய தாத்தாவாகிய
பீஷ்மரும் மாமாவாகிய சல்லியனும் மதிப்பிற்குரிய ஆசிரியர் துரோணரும் கிருபரும் அங்கே இருக்கின்றனர்.ஆகவே நான்போர் புரிய விரும்பவில்லை.
கிருஷ்ணர்.- "அர்ஜீனா,குல நாசம் என்பது உங்கள் இருவருக்கும் பொதுவானது.இந்த குலநாசத்தைப்பற்றி துரியோதனன்மற்றும் கெளரவர்கள் யாரும் கவலைப்படவில்லை.மேலும் கெளரவர் படையில் இருக்கும் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,சல்லியன் முதலியவர்களும் போருக்கு தயாராக இருக்கிறார்கள் .அப்படி இருக்கும் போதுநீ மட்டும் ஏன் குலநாசத்தைப்பற்றி கவலைப்படுகிறாய்.
Tags :