சமத்துவமின்மைக்கு பாஜக கொள்கைகளே காரணம் -மல்லிகார்ஜுன் கார்கே
நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு பாஜகவின் கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டினார். நாட்டில் உள்ள 21 பணக்காரர்களின் சொத்து 70 கோடி மக்களின் சொத்துக்கு சமம். இந்த இடைவெளியை நிரப்பும் வகையில் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்று ராகுல் அழைப்பு விடுத்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வறுமையில் இருந்து மீண்ட 20 கோடி மக்கள் பாஜகவின் கொள்கைகளால் மீண்டும் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
Tags :