ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டப்பேரவை வருகை

by Staff / 12-04-2023 12:06:50pm
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டப்பேரவை வருகை

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து, அவரது தந்தையும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் வீடு திரும்பினார். இதனிடையே இன்று, எம்எல்ஏவாக பொறுப்பேற்று, முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo