சதுரகிரி மலை கோவிலில் இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி.

by Editor / 01-07-2023 08:23:02am
சதுரகிரி மலை கோவிலில் இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலை கோவிலில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு அதாவது ஜூலை 4 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி ஆனி மாத சனிபிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் சனிக்கிழமை வரை பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். இதனை தொடர்ந்து 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. <br /> &nbsp;
 

Tags :

Share via

More stories

Logo