பாஜக எம்பி சுஷில் மோடிக்கு புற்றுநோய்

by Staff / 03-04-2024 01:02:23pm
பாஜக எம்பி சுஷில் மோடிக்கு புற்றுநோய்

பாஜக எம்பியும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடிக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அவரே வெளிப்படுத்தியுள்ளார். 'கடந்த 6 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது. இந்த மக்களவை தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் பிரதமரிடம் சொல்லிவிட்டேன்” என்று ட்வீட் செய்துள்ளார். 2005-2013 மற்றும் 2017-2020 வரை பீகார் துணை முதல்வராக இவர் பணியாற்றியுள்ளார்.
 

 

Tags :

Share via