திமுக - விசிக இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

by Staff / 06-03-2024 12:41:20pm
திமுக - விசிக இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை

2024 மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 2 தனித் தொகுதிகளும், 1 பொதுத் தொகுதியையும் கேட்டு வரும் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க திமுக முன் வருகிறது. அதே போல் விசிக பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என கூறி வருவதாலும் முடிவு எட்டுவதில் இழுபறி நீடிக்கிறது. கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் விசிகவின் ரவிக்குமார் போட்டியிட்டார். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டார்.இன்று மாலை நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால், தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via