கிணற்றில் விழுந்த 3 சிறுமிகள் பரிதாப பலி

by Staff / 12-06-2024 04:17:43pm
கிணற்றில் விழுந்த 3 சிறுமிகள் பரிதாப பலி

குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள சிமாலியா கிராமத்தில் மூன்று சிறுமிகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் இன்று (ஜூன் 12) ஒன்றாக சேர்ந்து வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செய்தனர். அப்போது ஒரு சிறுமி எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்தார். அவரை காப்பாற்றும் முயற்சியில் மற்ற இரண்டு சிறுமிகளும் கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo