தீவிபத்தில் 41 பேர் பலி: இந்திய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

by Staff / 12-06-2024 04:19:47pm
தீவிபத்தில் 41 பேர் பலி: இந்திய வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவல்

குவைத்தில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் இன்று (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தார்கள். இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “குவைத் தீவிபத்து செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சியில் உள்ளே. இதில் 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் அங்குள்ள முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo