"மழையை எதிர்கொள்ள சென்னை ரெடி" - துணை முதல்வர்

by Staff / 13-10-2024 01:38:43pm

வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், “மழை காலத்தில் அரசு தரும் எச்சரிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அவசர கட்டுப்பாட்டு மையத்தில் 150 பேர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். அரசுடன் இணைந்து பணியாற்ற 11,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயாராக உள்ளது” என்றார்.

 

Tags :

Share via