தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை.

by Editor / 16-08-2024 08:49:31am
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.16) தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கேவை மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும். மேலும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

 

Tags : தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை

Share via