பார்முலா 4 ரேஸ் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் உயிரிழப்பு!
சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்த கார் பந்தயத்திற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனபடி, கார் பந்தயம் நடைபெறும் இடத்தில் உள்ள விஐபி வாயிலில் கொளத்தூர் சரக உதவி ஆணையர் சிவக்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக இருந்த இடத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்தார். பின்னர், அவரை மீட்ட சக அதிகாரிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பாதுகாப்பு பணியின் போது உதவி ஆணையர் சிவகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
Tags : பார்முலா 4 ரேஸ் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆணையர் உயிரிழப்பு!