திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒன்பதாம் நாள் காலை உற்சவம் விநாயகர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பின்னர் ஐந்தாம் பிரகாரத்தில் கொட்டும் மழையில் பவனி வந்தனர்.
நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது, அதனை தொடர்ந்து ஒன்பதாம் நாள் காலை உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் விநாயகர் சந்திரசேகரருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்னர் திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் கொட்டும் மழையில் பவனி வந்தனர்.
அருணச்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தீப திருவிழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நாளை 19 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம்
ஏற்றப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் ஒன்பதாம் நாள் உற்சவத்தின் போது விநாயகர் சந்திரசேகரர் திருக்கோவிலில் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள், ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருக்கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை சுற்றி பவனி வந்து காட்சி அளித்து வருகின்றனர்.
Tags :


















