அதிபர் புதினுக்கு எதிராக போராடிய 800 பேர் தரதரவென இழுத்துச் சென்று கைது

by Admin / 14-03-2022 02:02:26pm
அதிபர் புதினுக்கு எதிராக போராடிய 800 பேர்  தரதரவென இழுத்துச் சென்று கைது

ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராடிய 800 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து மற்ற நாடுகளைப் போல் சொந்த நாட்டு மக்களுக்கு அதிபர் புதினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோ புதினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ் பர்க் உள்ளிட்ட 37 நகரங்களில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 817 பேரை போலீஸார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இதுவரை அதிபர் புதினுக்கு எதிராக போராடியதாக ஏறத்தாழ  15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories