ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

by Staff / 13-10-2022 04:42:49pm
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்கள் ஆகியும் போர் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இதனிடையே, போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷியா, இதுதொடர்பாக பொது வாக்கெடுப்பை நடத்தியது. பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி அந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது.

ஆனால் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன. இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டது. இதன்படி ரஷியாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

 

Tags :

Share via