தாடி வளர்த்து பெண் சாதனை
அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்த எரின் ஹனிகட் என்ற பெண், மிக நீளமான தாடியுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 38 வயதான எரின் கடந்த இரண்டு வருடங்களாக இடைவிடாமல் தாடி வளர்த்து வருகிறார். தற்போது அவரது தாடி 30 செ.மீ. அளவில் உள்ளது. இதன் மூலம் பூமியில் மிக நீளமான தாடியுடன் வாழும் பெண் என்ற சாதனையை இவர் படைத்தார். எரினின் முடி வளர்ச்சி பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) இந்த தாடி வளர காரணமாக உள்ளது.
Tags :