திமுகவின் தேர்தல் நாடகம்: டிடிவி தினகரன் சாடல்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு திமுகவின் தேர்தல் அறிக்கை போல் இல்லாமல் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் வரிப்பணமான ரூபாய் 100 கோடி செலவில் நடைபெற்று முடிந்திருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான விளம்பரமாக அல்லாமல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் மாநாடாக அமைய வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Tags :