மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சி.பி.எம் போட்டி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை,திருப்பூர்

by Staff / 12-03-2024 12:35:03pm
மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சி.பி.எம் போட்டி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை,திருப்பூர்

மக்களவை தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு திமுக தலைமை 2 தொகுதிகளை ஒதுக்கியது. அதன்படி, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் போட்டியிடுகிறது. நாங்கள் போட்டியிட்டு வென்ற கோவை தொகுதி திமுகவுக்கும், திமுக வென்ற திண்டுக்கல் தொகுதி எங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷணன் தெரிவித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை,திருப்பூர் வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via