ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளனர். தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் பாதுகாப்புக்காக 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து வழக்கமான பணிகளுக்கு திரும்ப தொடங்கியதால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
மதுரை,நெல்லையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வருவோரும், மதுரை,நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வோரும் அதிகளவில் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இதனால், ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பியது.
மதுரை,நெல்லையில்ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தீபாவளி விடுமுறை முடிந்து ஊர் திரும்பியவர்களால், நெல்லை ரயில் நிலையத்திலும் இரண்டாவது நாளாக கூட்டம் அலைமோதியது. சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கிய போதிலும், முன்பதிவு இல்லாத ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
Tags : ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.