கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

செங்கல்பட்டில் திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் செங்கல்பட்டு அண்ணா நகர் 9வது தெருவை சேர்ந்த துரை என தெரியவந்துள்ளது. இவர் அதே பகுதியில் செயல்படும் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மயக்க நிலையில் இருந்த துரை, சாலையை கடந்து மறுபுறத்தில் உள்ள கால்வாயில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் என கூறியுள்ளனர்.
Tags :