ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் தொடர்ந்து தடுத்தால் அந்நாடு நரகத்தில் வாழ நேரிடும்-.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ரூத் சோசியல் தளத்தில் ஈரானுக்கு புதிய காலக்கெடுவை விதித்து பதிவிட்டுள்ளார். அவர்தம், மின் நிலைய நாள் மற்றும் பாலங்கள் நாள் (பவர் பிளாண்ட் டே அண்ட் பிரிட்ஜ் டே) என பதிவிட்டுள்ள அவர் ஈரானின் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை அதாவது அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 7-ம் தேதி இரவு 8.00 மணி வரை காலக்கெடுவை விதித்துள்ளார். முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜல சந்தியை ஈரான் தொடர்ந்து தடுத்தால் அந்நாடு நரகத்தில் வாழ நேரிடும் (லிவ்விங் இன் ஹெல்) என்றும் அன்புள்ள மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் முற்றிலும் அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் உலக எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் இந்த முக்கிய வழித்தடத்தை ஈரான் முடக்கி உள்ளதால் அமெரிக்கா ஈரான் உள்ளிட்ட மோதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அமெரிக்கா விடுத்த இந்த மிரட்டல்களை ஈரான் அறிவற்றவை என்று நிராகரித்து உள்ளது.
Tags :



















