ஜெர்மனியை விட்டு வெளியே தங்க விரும்பினால், ராணுவத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
ஜெர்மனியில் ஜனவரி மாதத்தில் அமலுக்கு வந்துள்ள ராணுவ சேவை நவீனமயமாக்கல் சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறை தற்பொழுது ஜெர்மனி மக்களிடையே மிகப்பெரிய ஒரு கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. ஜெர்மனிக்கு வெளியே 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி வேலை அல்லது சுற்றுலா போன்ற எந்த காரணத்திற்காகவும் மூன்று மாதங்களுக்கு மேல் ஜெர்மனியை விட்டு வெளியே தங்க விரும்பினால் அந்நாட்டின் ராணுவத்திடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதுதான் எப்பொழுது மக்களை வெகுவாக புதிப்படையச் செய்துள்ளது. இதற்கு முன்பு ஓர் அல்லது அவசர நிலை காலங்களிலும் மட்டுமே இது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அமைதியான சூழலில் ராணுவ சேவைக்கு தகுதியானவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராணுவ சேவை தற்போது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இருப்பதால் விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி பொதுவாக மறுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் ,2026 ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியான பின்பே மக்களிடம் இந்த விஷயம் கவனம் பெற்று உள்ளது .தனிமனித சுதந்திரம் மற்றும் பயண உரிமைகளில் அரசு தலையிடுவதாக கூறி எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை சமூக வலைதளம் வழியாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Tags :



















