சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

by Editor / 22-12-2021 01:18:28pm
சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று மாலை அவரின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய நிலையில்,சண்முகநாதன் மீது அதீத பாசத்தால், இரண்டாவது முறையாக நேற்றிரவு மீண்டும் அவரின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்  இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டார்
 

 

Tags :

Share via