அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திரு இலஞ்சி முருகன் ஆலயத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

by Editor / 21-03-2022 01:52:54pm
அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திரு இலஞ்சி முருகன் ஆலயத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி பகுதியில் உள்ளது குமாரசுவாமி திருக்கோவில். 
பழமையும், பெருமையும் வாய்ந்த இத்திருக்கோயி லானது 3-ம் நூற்றாண்ட்டில் கட்டப்பட்டது.

முருகன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இலஞ்சிகுமாரசுவாமி கோவிலில் அகஸ்தியர் வழிபட்டதாகவும் வரலாறு உண்டு.

இப்படி பட்ட பிரபலமான இலஞ்சிகுமாரசுவாமி கோவிலில் கடந்த 12-வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோயில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்றது. 

இந்த நிலையில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை ஒட்டி இன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 16-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, அனுக்ஞை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன பூஜை, பிரவேச பலி, ரசேஷேக்ண ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கடந்த 17-ம் தேதி முதல் 20-ம்தேதி வரை 5 காலபூஜைகள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஆறாம் கால பூஜை, நாமசந்தானம், ஸ்பர்சாகுதி,  பரிவார யாகசாலையில் பூர்ணாஹீதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 10.15 மணிக்கு குமாரசுவாமி திருக்கோவில் விமானங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திரு இலஞ்சி முருகன் ஆலயத்தில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
 

Tags :

Share via