இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது*

by Editor / 22-03-2022 11:55:26am
 இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது*

விருதுநகரில் காதலிப்பது போல ஏமாற்றி இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது*

விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன்(27). இவரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்துள்ளனர்.

இந்நிலையில், இளம்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி ஹரிஹரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஹரிஹரனின் நண்பர்களான ரைஸ்மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), ஓட்டுநர் பிரவீன் (21), மற்றும் 9-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர், ஹரிஹரன் காதலித்த இளம்பெண்ணிடம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண், இதுகுறித்து தனக்குதெரிந்த மாடசாமி என்பவரிடம் கூறியுள்ளார். அவர் அந்த வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பச் சொல்லி, அவரும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர் மற்றும் ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

 

Tags : 8 arrested for sexually abusing teenager

Share via