ஜெய்நகர் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே ஜெயநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதில் சில பயணிகள் லேசான காயம் ஏற்பட்டது.
பிற்பகல் 3 மணி அளவில் லாஹாவித் மற்றும் தேவலாலி இடையே ரயில் பெட்டிகள் தடம் புரண்டன மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன மற்றும் ரயில் மூலம் பயணிகளை அனுப்பி வைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர் தடம்புரண்ட ரயில் பெட்டிகளும் அகற்றப்பட்டன பயணிகள் பேருந்து மூலம் நாசிக் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் வந்த ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
Tags :



















