பரிசாக கிடைத்த நகையை விற்றதாக இம்ரான் கான் மீது புகார்

by Staff / 14-04-2022 11:54:03am
பரிசாக கிடைத்த நகையை விற்றதாக இம்ரான் கான் மீது புகார்

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோற்றதால், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீஃப் பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமைந்தது முதலாக, இம்ரான் கான் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்த மறைமுக விசாரணை அங்கு வேகமெடுத்துள்ளது.

அதன்படி, பிரதமராக இருந்தபோது, வெளிநாடு ஒன்றில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட நகையை இம்ரான் கான் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தான் சட்டத்திட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள், அந்நாட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், இம்ரான் கானோ அந்த நகையை கருவூலத்தில் ஒப்படைக்காமல் சுமார் ரூ.18 கோடிக்கு விற்றதாக தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக ஒரு சில லட்சங்களை மட்டுமே அவர் கரூவூலத்தில் வழங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

 இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via